உயர் தரப்பரீட்சையில் சித்திடைந்த மாணவர்களுக்கு அதிபர் பாராட்டு
- சியாஉர் ரஹ்மான் - பறகஹதெனிய
வெளியிடப்பட்டுள்ள க.பொ.த உயர் தரப்பரீட்சையில் பறகஹதெனிய மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் சித்திடைந்த மாணவர்களை அதிபர் என்ற வகையில் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் குறித்த மாணவர்களுக்கு தெரிவிப்பதாக கல்லூரியின் அதிபர் ஐ. அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து, பரீட்சையில் சிறந்த அடைவினை பெற்ற மாணவர்கள் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள். இது அவர்களை பெற்றெடுத்து, வளர்த்த பெற்றோருக்கும், கற்பித்த ஆசியர்களுக்கும், குறிப்பாக பாடசாலைக்கும் கெளரவத்தை பெற்றுத்தருவதோடு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.
குறிப்பாக விஞ்ஞானம், வர்த்தகம்,கலை ஆகிய துறையில் எமது பாடசாலை மாணவர்கள் சிறந்த முறையில் சித்தியடைந்துள்ளனர். இது எமக்கு பெரிதும் மகிழ்ச்சியை பெற்றுத்தந்துள்ளது.
அதே போன்று சித்தியடைவதற்கு தவறிய மாணவர்களும், தோல்விகளைக்கண்டு அஞ்சாமல் மலை குளைந்தாலும் நிலை குளைந்து விடக்கூடாது என்பார்கள். ஆகவே தமது எதிர்கால கல்வி முன்னேற்றத்தை ஆழமாக மனதில் கொண்டு அடுத்துவரக்கூடிய சந்தர்ப்பங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.
மேலும் இதற்க்காக வழிகாட்டிய ஆசிரியர்கள், எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைக் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
No comments