Breaking News

கல்முனை, சம்மாந்துறை தொகுதிகளில் ஐ.தே.க.வின் ஒன்றுகூடல்; அழைப்பு விடுக்கிறார் ஜெமீல்.!

-ஏயெஸ் மெளலானா-

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை (05) பிற்பகல் 3.00 மணியளவில் அப்துல் மஜீட் மண்டபத்திலும் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் 10.00 மணியளவில் அல்பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வுகளில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார , முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர் அனோமா கமகே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாக கலந்து கொள்கின்றனர்.


இந்நிகழ்வுகளில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் (Authorized Agent for Kalmunai & Sammanthurai Electorates) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அழைப்பு விடுக்கின்றார்.




No comments

note