ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த அப்துல் முனாப் (பாஸர்) அவர்கள் காலமானார்.
கனமூலையைச் சேர்ந்த மர்ஹும் காஸிம் மொஹிதீன் ஜாரியா உம்மாவின் அன்பு மகன் அப்துல் முனாப் (பாஸர்) அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் சித்தி ஹைரா அவர்களின் அன்புக் கணவரும், மர்ஹும் சாலிப், ராலியா உம்மாவின் அன்பு மருமகனும், அஸ்பர், மௌலவி அஸ்ஹர் (ரஷீதி), மௌலவி அஸ்ஜத் (காஸிமி), மௌலவி - அல் ஹாபிழ் அர்சாத் (நளீமி), ஹப்ஸா, அம்மார் ஆகியோரின் அன்புத் தந்தையும், மஸ்தூரா, பஜீலா, சமீஹா ஆகியோரின் அன்பு மாமனாரும், சூபியா, நிஸ்பா, பர்ஸானா, ஹிஷாம் ஆகியோரின் அன்பு சகோதரரும், மர்ஹும் ஜௌபர், அப்துல் கபூர், ஸம்சுதீன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (28) மாலை 5.00 மணிக்கு கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல்
மகன்
No comments