Breaking News

சமூக செயற்பாட்டாளர் இஷாம் மரிக்காருக்கு நீதி வேண்டி புத்தளத்தில் நாளை ஆர்ப்பாட்டம்

இளம் சமூக செயற்பாட்டாளரும் தூய தேச கட்சியின் தலைவருமான எஸ்.எம். இஷாம் மரிக்கார் மீது அண்மையில் கொலைவெறி தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


வரும் 2025ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முகமாக அரசியல் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் இவர் விடுமுறைக்காக கத்தாரில் இருந்து புத்தளம் சென்றபோதே மேற்படி கொலைவெறி தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளார்.


தாக்குதலில் மிகப்பயங்கரமாக பாதிக்கப்பட்ட இவர் புத்தளம் தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார். 

முகம் மூடிய இருவர் பயங்கர ஆயுதம் கொண்டு இருட்டில் மூர்க்கத்தனமாக தாக்கியதில் இரண்டு கால்களும் உடைந்துள்ளன. கைவிரல்கள் நொறுக்கப்பட்டு தலையில் ஆழமான காயங்களும் ஏற்பட்டுள்ளது. 


இது சம்பந்தமாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தாக்கியவர்கள் தலைமறைவாகியுள்ளதால் தாக்குதலுக்கான காரணம் இதுவரை முறைப்படி கிடைக்கவில்லை. 


எனினும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இது ஒரு அரசியல் சதி என்றும், அரசியல் காழ்புணர்ச்சியால் செய்த செயல் என்றும் கூறுகின்றனர். புத்தளம் மாவட்டம் முழுதும், இளைஞர் யுவதிகள் மத்தியில் இஷாம் மரிக்காரின் அரசியல் பிரவேசம் புத்துணர்ச்சியை உண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                                               சமூக ஆர்வலரும் தூய தேசத்திற்கான கட்சியின்  தலைவரும் ஆகிய எஸ்.எம்.இஷாம் மரைக்கார் தாக்கப்பட்ததை கண்டித்தும், அவருக்கான நீதியை பெற்றெடுப்பதற்காகவும் புத்தளம் இளைஞர் அமைப்பினால் நாளை வெள்ளிக்கிழமை 07 ஆம் திகதி ஜும்மாவுக்குப் பின் புத்தளம் பெரிய பள்ளிக்கு (மினாராவுக்கு) முன்னால் அமைதியான முறையில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் அனைவரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து நீதியை பெற்றெடுக்க உதவுமாறு வேண்டுகின்றோம்.




No comments

note