கடையாமோட்டை தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இஸ்லாமிய புதுவருடத்தை சிறப்பிக்கும் நிகழ்வு!
முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வு நேற்று (20) பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கனமூலை பெரிய பள்ளியின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.எம். அன்பாஸ் (ஹிழ்ரி) மாணவர்களுக்கு முஹர்ரம் மாதத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி விழிப்புணர்வு உரையை நடாத்தினார்.
இதன் போது பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்வூட்டப்பட்டது.
இவை அனைத்தும் காலை விஷேட ஆராதனையில் சுற்றுநிருபத்திற்கமைவாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
KMCC MEDIA UNIT
No comments