அதிபரை ஹஜ்ஜுக்கு வழியனுப்பிய பாடசாலைச் சமூகம்.
கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 13ஆம் திகதி பயணமாகவுள்ளார்.
அதிபரை வழியனுப்பும் நிகழ்வு இன்று (12) பாடசாலையில்
சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பழை மாணவர் சங்கத்தினால் (200,000/=) இரண்டு இலட்சம் ரூபா காசோலை அதிபருக்கு ஹஜ் பயணதிற்காக அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையில் விஞ்ஞான துறையை ஆரம்பித்து பல மாணவர்களை வைத்திய துறைக்கும், விஞ்ஞான பட்டதாரிகளையும் உருவாக்கிய ஓய்வு பெற்றுச் சென்ற ஏ.எஸ்.எம். மாஹிர்
ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக SCIENCE FORUM, SCIENCE UNION ஆகியோர் இணைந்து 100,000/= ரூபா காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன் உட்பட அதன் உறுப்பினர்கள், பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அதன் செயலாளர் சீ.எம். தாவூத் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம்.ஜெஸீர் உட்பட அதன் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகள் யாவும் மதியபோசணத்துடன் நிறைவு பெற்றது.
இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதால் பதில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஏ. அஷ்ரப் தற்போதைய புதிய அதிபராக பதவிப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.
No comments