கடையாமோட்டை பாடசாலையில் இடம்பெற்ற விஷேட மார்க்கச் சொற்பொழிவு!.
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு இன்று (22) பாடசாலையின் அஷ்ரப் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரபல உளவள ஆலோசகரும், மார்க்கச் சொற்பொழிவாளருமான அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் அவர்கள் பின்வரும் தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்.
மாணவர்களுக்கு
ஒழுக்கம் இல்லாத கல்வி பயன் - காலை 9.00 - 11.30 வரை
ஆசிரியர்களுக்கு
அமானிதமும், ஹலால், ஹராம் பேணுதலும். - மதியம் 12.00 - 02.00 வரை
பெற்றோர்களுக்கு
பிள்ளை வளர்ப்பும், பெற்றோரின் பொறுப்பும். - மாலை 03.30 - 06.30 வாரை
மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments