Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா!.

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா  இன்று (15) பாடசாலையின்  அஷ்ரப்  மண்டபத்தில் அதிபர் ஏ.ஏ. அஷ்ரப் அவர்களின்  தலைமையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கே.கே.ஜீ. விக்கிரமசிங்க கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவித்தார்.


குறித்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்  தலைவருமான ஏ.எச்.எம்.ஹாரூன், பழைய மாணவார் சங்க உறுப்பினர் எம்.என்.எம். தாஸீம் மற்றும் பாடசாலையின் ஒழுக்கக் குழு, ஆசிரியர்கள்,  மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



























No comments

note