சிறையில் தள்ள வேண்டும் அல்லது கொலை செய்ய வேண்டும் நீதிமன்றில் மட்டுமே மக்களின் நம்பிக்கை - முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு
என்னை கொலை செய்ய வேண்டும் அல்லது சிறையில் தள்ள வேண்டும் இவற்றில் இரண்டில் ஒன்றை தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் செய்யத் துணிந்து விட்டது என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டுகிறார்.
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் என்றுமில்லாதவாறு தீவிரமாக செத்து வருகிறது நாட்டில் நீதிமன்றம் ஒன்றில் மாத்திரமே மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
மக்கள் ஆதரவோடு இருக்கும் என்னை சிறையில் அடைத்தாவது கொலை செய்தாவது தேர்தலை நடத்தி அரசாங்கம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முனைகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments