தேசிய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற எம். ஜெரீர் மற்றும் எம்.நஸ்ரான் ஆகியோருக்கு கௌரவிப்பு!.
பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான பெருக்குவட்டானைச் சேர்ந்த எம்.ஜெரீர் மற்று சமீரகமயைச் சேர்ந்த எம்.நஸ்ரான் ஆகியோர் நடைபெற்ற 19 வயதின் கீழ் தேசிய மட்ட கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்விரு வீரர்களும் சிலாபம் SUNQUICK அணிக்காக திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்தனர்.
குறித்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (29) சமீரகம "NEW YOUNG BIRDS" விளையாட்டு கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது பணப்பரிசு, மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இவர்களுக்கான நினைவுச் சின்னத்தை சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி) வழங்கி கௌரவித்தார். இவர்களுக்கான பணப் பரிசினை சமீரகம முஸ்லிம் வித்தியிலயத்தின் உப அதிபர் எஸ்.எல். ஜெனீஸ் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் இவ்வீரர்களுக்கு பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர் திரு. ஜே.பிரசண்ணா அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கியதோடு இதற்கான சகல ஏற்பாடுகளையும் சமீரகம, பெருக்குவட்டின் ஊர் மக்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments