இலங்கை பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுக்களின் இளைஞர் பிரதிநிதிகளாக ஆசிரியர்கள் தெரிவு.
இலங்கை பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுக்களின் இளைஞர் பிரதிநிதிகளாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
91 வது பாராளுமன்றத்தில் 111வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் 17 துறைசார் மேட்பார்வை குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக் அமைய அண்மையில் நியமிக்கப்பட்டது
இதனடிப்படையில் 17 துறைசார் மேட்பார்வை குழுவின் உறுப்பினர்களாக சிஹார் ஆசிரியர் - பகினிகஹவெல(மொனறாகலை), ஸெய்னுதீன் ஆசிரியர் - ஏராவூர், யூசுப் ஆசிரியர் - ஓட்டமாவடி, ரிஷாட் ஆசிரியர் - சம்மான்துறை, ஹுமைத்- அலூபொத(மொனறாகலை) போன்றோர் தெரிவுசெய்யப்பட்டு
மேலும் துறைசார் மேற்பார்வை குழுவின் இளைஞர் பிரதிநிதிக்கான பரீட்சைப்படுத்தல் செயலமர்வு நேற்று கொழும்பு பத்திரமுல்ல வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் இடம் பெற்றது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம். தம்பிக்க திசாநாயக்க வின் அழைப்பு கடிதத்துக்கு அமைய இவர் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.
இந்த செயலமர்வில் பிரதமர் அதிதியாக ஜனாதிபதி, பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்கள் இளைஞர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகளையும் மேற்கொண்டனர்.
No comments