புத்தளம்/சமீரகம முஸ்.வித்தியாலயத்தின் இன்னுமொரு சாதனை!!!
பு /சமீரகம முஸ்லிம் வித்தியாலயம், பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக இவ்வருடம் கோட்ட மட்ட கரப்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் 16 வயதின் கீழ் (ஆண்கள்) அணியினர் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்தனர்.
(அல்ஹம்துலில்லாஹ்)
இதற்கு ஒத்துழைத்த பாடசாலையின் அதிபர் மதிப்பிற்குரிய அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்ழார் (நழீமி) மற்றும் உப அதிபர் எஸ்.எல்.எம். ஜெனீஸ், பகுதித் தலைவர் மற்றும் உடற்பயிற்சி விளையாட்டு பொறுப்பாசிரியர் எஸ்.எம்.எல்.எம். இஜாஸ் குறிப்பாக கரப்பந்தாட்ட வீரர், பயிற்றுவிப்பாளர் சகோ. றிப்கான் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
இவ்வருடம் கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் பங்கு பற்றிய எம்.ஆர்.எம். றிப்தி (16 வயதின் கீழ் - பரிதி வீசுதல்) என்.எம். ராசிக் பரீத் ( 14 வயதின் கீழ் - உயரம் பாய்தல்) ஆகிய எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெற்று வலய மட்டத்துக்கு தெறிவாகியுள்ளனர். இவர்கள் வலய, மாகாண,தேசிய மட்ட போட்டிளிலும் வெற்றி பெற்று எமது பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் பாராட்டை பெற்றுத்தர வாழ்த்துகிறோம்!!!
ஆசிரியர் மற்றும் பல்வேறு பௌதீக வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்ற போதிலும் எமது பாடசாலை குறுகிய காலத்துக்குள் கல்வி, விளையாட்டு, கலை போன்ற பல இணைப்பாட செயற்பாடுகளிலும் பிரகாசித்து சாதனைகள் பல படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்டம் வரையும் சென்று பல வெற்றிகளையும் ஈட்டியுள்ளது.
இதற்காக முதலில் அல்லாஹ்வுக்கும், அடுத்ததாக இப்பாடசாலைக்கு தலைமை தாங்கி சிறந்த முறையில் வழிநடத்தி செல்லும் அதிபர் மற்றும் ஆசியர் குழாத்துக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்!!!
செயலாளர், உறுப்பினர்கள்,
பாட.அபி.சங்கம்,
சமீரகம மு.வித்தியாலயம்
No comments