கடையாமோட்டை தேசிய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.எச்.எம். ஹாரூன் அவர்களினால் மேலங்கி அன்பளிப்பு!
கடையாமோட்டை தேசிய பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன் தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலையின் 16 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி மாணவர்களுக்கு மேலங்கி (T.Shirt) அன்பளிப்பு செய்துள்ளார்.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன் அவர்கள் பாடசாலையின் பல்வேறு பௌதீகவள அபிவிருத்திக்கு தனது சொந்த நிதியினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு செயலாளர் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றமை பாடசாலை சமூகம் முன்னுதாரணமாக கருதுகின்றது.
இதேவேளை பாடசாலையில் அவ்வப்போது ஏற்படும் நிதிப் பிரச்சினைகளின் போது அவர் முன்னின்று தனது சொந்த நிதியினை வழங்கி பாடசாலையின் வளர்ச்சியில் இரவு, பகல் பாராது அயராது உழைத்து உறுதுணையாக திகழ்கின்றார்.
கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க செயலாளர் வரிசையில் பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியில் தற்போதைய செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன் அவர்களின் காலம் பொற்காலம் எனலாம்.
KMCC MEDIA UNIT
No comments