கடையாமோட்டை தேசிய பாடசாலையில் தரம் - 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!.
கடையாமோட்டை தேசிய பாடசாலையில் தரம் - 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (22) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் பாடசாலையின் TPS மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம்.ஹாரூன் விஷேட அதியாகவும், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம். ஜெஸீர் கௌரவ அதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
தரம் - 6 புதிய மாணவர்களை தரம் 7 மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், தரம் 6 புதிய மாணவர்கள், அம்மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments