Breaking News

மெற்ரோபொலிட்டன் கல்லூரியின் வருடாந்த இஃப்தார் நிகழ்வு : பிரதம அதிதியாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.

(நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்)

நாட்டில் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கும் மெற்ரோபொலிட்டன் கல்லூரியின் வருடாந்த இஃப்தார் நிகழ்வு கல்லூரி முதல்வரும், கல்முனை மாநகர சபை முன்னாள் மேயருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.


மறைந்த சாய்ந்தமருதின் மூத்த உலமாவும், கல்விமானுமான மௌலவி யூ.எல்.எம். காஸிம் மௌலவிக்கான விசேட துஆ பிராத்தனையும், மார்க்க சொற்பொழிவும் மௌலவி எம்.எச்.எம்.நிப்ராஸ் (ரஹ்மானி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் உலமாக்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை, கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி உட்பட பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், கல்விமான்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உத்தியயோகத்தர்கள், மெற்ரோபொலிட்டன் கல்லூரி உத்தியோகத்தகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.











No comments

note