Breaking News

சீன தூதரகத்தினால் கொழும்பு முஸ்லிங்களுக்கு நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர்

சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்டதை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் கொழும்பில் வாழும் முஸ்லிங்களுக்கு சீன தூதரகத்தினால் Faxian தொண்டு திட்டத்தின் படி உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


சீன பௌத்தர்களுடன் இணைந்து சீன பௌத்த ஆலயங்கள் ரமழானுக்காக சீன பௌத்த சங்கத்தின் ஊடாக உலர் உணவுப் பொதிகளை வழங்கியமையை மக்களுக்கு கையளிக்க முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு 09 தெமட்டகொடவில் அமைந்துள்ள Y.M.M.A மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேவையுடைய மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


உரிமைகளுக்கான அமைப்பின் முக்கியஸ்தரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமாக்கள் , சீன தூதரக அரசியல் விவகார பணிப்பாளர், தூதரக அதிகாரிகள், முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





No comments

note