Breaking News

கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட கடையாமோட்டை தேசிய பாடசாலையின் Noora Al Ghaiz இருமாடி கட்டிடம்

பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின்  Noora Al Ghais  இருமாடி வகுப்பறைக் கட்டிட திறப்பு  விழா (08)  புதன்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


முன்னாள்  மாகாண சபை உறுப்பினர்  ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  குவைத் நாட்டின் இஸ்லாமிக் செண்டர் அமைப்பின் ஊடாக இலங்கை அல் ஹிமா அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இக்கட்டிடம் அமையப்  பெற்று குவைத் நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் அத்வானி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.



இவ்விழாவிற்கு விஷேட அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.பீ.எஸ். ஆப்தீன் எஹியா, அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. நூருல்லாஹ் (நளீமி), இலங்கை இஸ்லாமிய மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க்  எம்.பீ.எம். ஷரூக் (கபூரி), அஷ்ஷெய்க் முஹம்மத் பிர்தௌஸ் (நளீமி) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மொழி இஸ்லாமிய கற்கை நெறி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மாஹீர் ஆகியோருடன்,


கௌரவ அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களானகே.எம்.எம். பைஸர் மரிக்கார் என்.எம்.எம்.ஹிஸாம், முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான  ஏ.எச்.எம். றிஸ்வி, எஸ்.எச்.எம்.ரபீக் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ். சேகு அலாவுதீன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம் .ஹாரூன், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர். எம்.ஜே. ஜெஸீர், பாடாசாலை கல்வி அபிவிருத்திக் குழு செயலாளர் சீ.எம்.எஸ். தாவூத் ஆகியோருடன்,  


காரியாலய அதிதிகளாக புத்தளம் வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிபாளர் ஆர்.எம்.ஐ.எம் அலிஜின்னா, நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் எம்.எஸ்.எம். ஸஹீர், நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதேவேளை பு/சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் நஜீப், மதுரங்குளி ஸ்கூல் ஒப் எக்லென்ஸ் சர்வதேச பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல், பு/ஆண்டிமுனை ஸ்ரீ- கிருஷ்ணா ஆரம்ப பாடசாலையின் அதிபர் கே.தொண்டமான், பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்லார் (நளீமி), பு/ கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எஸ்.எம். ஹனிபா, பு/ கஜுவத்த முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் இஸட்.ஏ. ஸன்ஹீர் (கபூரி), பு/புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம். றிபாய்தீன்,பு/ உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் நளீம், மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுபதிகாரி, விக்கிரமசிங்க,   ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் போது பாடசாலையின் பழைய மாணவர்களால் நூறா அல் - காயிஸ் என்ற  சிறப்பு மலர் ஒன்று வெளியிடபட்டமையும், பிரதம அதிதி மற்றும் விஷேட அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.


















 


































No comments

note