Breaking News

பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவசக் கருத்தரங்கு தொடர்

 சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

2022 (2023) க.பொ த. (சா/த) பரீட்சைக்கு தோற்றும் பறகஹதெனிய மத்திய கல்லூரி  தேசிய பாடசாலையின் மாணவர்களுக்காக பழைய மாணவர் சங்கத்தினால் இலவசமாக நடாத்தப்படும் கருத்தரங்கு தொடரின் விஞ்ஞான பாடத்திற்கான கருத்தரங்கு 05/03/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் பி.ப.4:00 மணி வரை பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது.


கருத்தரங்கினை பாடசாலையின் 2014 க.பொ.த (சா/த) வகுப்பு பழைய மாணவர்களின் பூரண அனுசரணையுடன் நடைபெற்றது. வளவாளர்களாக பேராதெனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீட மாணவரும் கல்லூரியின் பழைய மாணவருமான றிம்ஸி அப்துல் அஸீஸ் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட  மாணவர் எம்.என்.எம். சிப்ராஸ் ஆகியோரால் விரிவுரை நடாத்தப்பட்டது. 


குறிப்பாக மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞானப்பாடத்தின் பகுதி ஒன்றிற்கான  வினாப்பத்திரங்கள் வழங்கப்பட்டு திருத்தப்பணிகளையும்  மேற்கொண்டு 40 வினாக்களில் 30 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களும் 2014 க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். 


ஆரம்ப நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர் ஜனாப் ரிஃபாஸ், ஆசிரியர் மொஹமட் அர்ஷாத்  பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவரும் வாணிப மற்றும் கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான எம்.எஸ்.எம். நவாஸ், சங்கத்தின் செயலாளர் பாஹிம் அமானுல்லாஹ், பொருளாளர் மொஹமட் ஹுமாம் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு 2014 வகுப்பின் சார்பாக ஏ.ஆர்.எம். பாசில், எம்.ஏ.எம். உஸ்மான், எம்.என்.எம். நபீல் ஆகியோர் தமது பூரண பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.








No comments

note