கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா நியமனம்
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணியும்,அகில இலங்கை சமாதான நீதிபதியும், உத்தியோகப்பற்றற்ற நீதவானுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 01.03.2023 ஆம் திகதியில் இருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மருதமுனையிலும் கிழக்கிலங்கையிலும் புகழ்பெற்ற நன்மதிப்புக்குரிய அன்சார் மௌலானா அவர்கள் பேராதனை பல்கலைக்கழக பொதுப் பட்டதாரியும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமானியும் ஆவார். இவர் இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவரும் ஆவார். இவர் வழக்கறிஞர் உயர் தொழிலில் 25 வருட நிறைவான ஆளுமையையும் மக்கள் நன்மதிப்பையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments