நாளை புத்தளத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்பாட்டத்திற்கான அழைப்பு!
கபூரியாவை பாதுகாப்போம்! , வக்ஃபு சொத்துக்களைப் பாதுகாப்போம்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
நண்பர்களே! உறவுகளே! சகோதர, சகோதரிகளே நான் ஹபீல் நிஜாமுதீன் (கபூரி) இன்று நாட்டில் பரவலாக பேசப்படக் கூடிய ஒரு விடயம் தான் மஹரகமையில் 92 வருடங்களாக அமைந்திருக்கும் எமது கபூரிய்யா அரபுக் கல்லூரியும் அதன் உடமையான கிராண்ட்பாஸ் இடமும் எமது முஸ்லிம் சமூகத்திற்காக கபூர் ஹாஜியார் அவர்களால் 1931 ம் ஆண்டு வக்பு செய்யப்பட்ட எம் சமூகத்தின் சொத்துக்களாகும்.
ஆனால் தற்போது கபூர் ஹாஜியாருடைய குடும்பத்திலிருந்து நான்காவது பரம்பரையில் வந்த அஸ்மத் என்பவன் அவற்றை தனது உடமையாக்கி அதை பல கோடி ரூபாய்க்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கி அதனை கல்லூரிக்கு வழங்காது நரக நெருப்பை உண்பதற்கு கயவர்களைக் கொண்டும் தன்னுடைய அரசியல், பண பலத்தைக் கொண்டும் தயாராகி வருகின்றான்
ஆகவே இதனை கண்டிக்கும் வகையில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை கபூரிய்யா பழைய மாணவர்களாகிய நாங்கள் புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா, ஜமாத்தே இஸ்லாம், Clean புத்தளம் என பல்வேறு அமைப்புக்களுடன் சேர்ந்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை 2023/03/31 ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து நடாத்த உள்ளோம்.
எனவே தாங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனைய சகோதரர்களும் இதில் கலந்து கொண்டு எம் சமூகத்திற்கு மீட்டெடுக்க ஏனைய குரூப்களிலும் பகிரவும்.
இவ்வண்ணம்
உங்கள் நண்பன்
ஹபீல் நிஜாமுதீன் (கபூரி)
2023/03/30
No comments