அட்டாளைச்சேனையில் தலைமைத்துவப் பயிற்சியும் தொழில் வழிகாட்டல் செயலமர்வும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், எக்ஸ்டோ ஸ்ரீலங்கா, அவரோன் செரிடி சமூக சேவைகள் அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகை மற்றும் வாரமஞ்சரி இணைந்து நடாத்தும் தலைமைத்துவப் பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (06) காலை 08.30 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் அவரோன் செரிட்டி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நஸாத் சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் பாத்திமா நஹிஜா முசாபீர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுரிக்கா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயத்தின் உதவிப் பணிப்பாளர் யூ.ஏல்.அப்துல் மஜீத் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை மற்றும் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் டி. செந்தில் வேலவர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.முபாரக் அலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.எம். நளீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர், சட்டக் கல்லூரி மாணவர் விரிவுரையாளர், இணைப்பாளர் - கலைமானி கற்கை நெறி (அரசியல்) திறந்த பல்கலைக்கழகம் ஏ.ஆர். அஸ்ஸாம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஷர்ஃபான் ஆகியோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இச் செயலமர்வில் 15 வயது தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ள முடியும். அவ்வாறு கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர், யுவதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தினைப் பூரணப்படுத்தி 05 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சீ.எம்.றிப்கான் கேட்டுள்ளார்.
https://forms.gle/J5jxqc48nGf6u7439
No comments