தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தினால் பதிவாளருக்கு பிரியாவிடை!
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில் அப் பல்கலைகழகத்தின் சுதந்திர ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரியாவிடை நிகழ்வு தொழிலாளர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் முனாஸ் முகைடீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அதேவேளை கௌரவ அதிதியாக துணைப் பதிவாளர் ஐ.எல்.தஸ்லிம், விஷேட அதிதியாக பதில் நிதியாளர் சி.எம்.வன்னியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் முனாஸ் முகைடீன் உள்ளிட்ட உயர் சபை உறுப்பினர்களால் மாலையிட்டு வரவேற்கப்பட்ட பதிவாளர் சத்தார் அவர்கள், இப் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய உயர் பணிகள் தொடர்பில் சிலாகித்துப் பேசிய; நிகழ்வின் தலைவர் மற்றும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் அவர் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவித்தனர்.
சுதந்திர ஊழியர் சங்கத்தின் உயர்சபை உறுப்பினர்களால் பொன்னாடை போற்றி ஞாபகப்பொருள் மற்றும் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். நிகழ்வின்போது ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களும் பிரசன்னாமாகியிருந்தனர்.
No comments