Breaking News

கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கான அடிகக்கல் நாட்டி வைப்பு!

கனமூலை பாடசாலையின் பௌதீகவளத்தின் நீண்ட கால குறைபாடாக கானப்பட்ட பிரதான  நுழைவாயில் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக கனமூலையைச் சேர்ந்த மர்ஹும் கதிர் மரைக்கார் அவர்களின் புதல்வர்களின் நிதியில்  கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின்  பழைய மாணவர்களின்    BACK TO SCHOOL எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையின் பிரதான  நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் (21) ஆம் திகதி இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் எஸ்.எஸ்.எம்.ஹனிபா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபையின்  உறுப்பினர் கே.எம்.எம்  பைசர் மரிக்கார் கலந்துகொண்டார்.


இந்நிகழ்வில் கனமூலை பெரிய பள்ளியின் தலைவர்  அஷ்ஷெய்க் எச்.எச்.௭ம்.நஜீம் (ஷர்கி) உட்பட அதன் நிருவாக  உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மர்ஹும் கதிர் மரைக்கார் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் "BACK TO SCHOOL" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் பௌதீகவள திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















No comments

note