பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கலைவிழாவும், கௌரவிப்பு நிகழ்வும்.
புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கலைவிழாவும், கௌரவிப்பு நிகழ்வும் கடந்த (20) ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் தேசகீர்த்தி எம்.எச்.எம்.றாசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனையின் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் 2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி வடமேல் மாகாணத்தில் தமிழ் பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவனையும், வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களையும் வாழ்த்தி பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌவரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் முன்னாள் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. நிமல்சிறி (ஓய்வு நிலை) முன்னாள் புத்தளம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எஸ்.இ. புஸ்பராஜன் (ஓய்வு நிலை), பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அயல் கிராம பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு இவ்விழாவினை பாடாசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments