Breaking News

சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் - ராஜித சேனாரத்ன எம்.பி

-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


தமக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால், நாட்டை தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் இந்த நேரத்தில் மக்களுக்குத் தேவை தேர்தல் அல்ல, உணவுதான் என்று குறிப்பிட்ட அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காக ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.




No comments

note