Breaking News

சபீஸை இடைநிறுத்திய அதாஉல்லாஹ் : அதாவுல்லாஹ்வுக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்கிறார் சபீஸ்.

மாளிகைக்காடு நிருபர்

தேசிய காங்கிரஸின் ஸ்தாபக கால உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய இணைப்பாளருமான அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸை  தேசிய காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தி அக்கட்சியின் செயலாளரும். பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய காங்கிரசின் ஆளுகைக்குட்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த கூட்டம் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி தலைமையில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு இது தொடர்பில் எஸ் எம் சபீஸ் பேசினார்.


அங்கு கருத்து வெளியிட்ட அவர், தேசிய காங்கிஸ் கட்சியை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஆரம்பித்த பின்னும் அவரோடு இருந்து இந்த ஊர் மற்றும் இப்பிராந்திய  வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் எஞ்சியிருந்தது நான் மட்டும்தான். இப்போது என்னையும் இடைநிறுத்தி அதாஉல்லா எம்.பி அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்


உலகை உலுக்கிய கொரோனா முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலைகளின் போது மக்களுக்கு பணி செயாமல் மாநகரம் ஊமைச் சபையாக  இருந்தபோது அதாஉல்லா அவர்களுக்கும் தனக்குமான கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினமா செய்வதாக சபையோர் முன்னுலையில்  தெரிவித்தேன். ஆனால் அதனை அப்போது அதாஉல்லா அவர்கள் அன்று ஏற்க மறுத்தார்

 

தேசிய காங்கிரஸ் என்பது அதாஉல்லாவினதோ அல்லது தனி நபரினதோ சொத்து கிடையாது. அதனை நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கினோம் இப்போது அதாஉல்லா அவர்கள் அக்கட்சியின் செயலாளராக இருப்பதனால் என்னை நீக்கயுள்ளார். அவரது பதவி மாறும்போது அக்கட்சி எங்களிடம்தான் வந்து சேரும் எனவும் தெரிவித்தார்.


எவ்வித முன் அறிவிப்புகளோ, முறையான விசாரணைகளோ செய்யாமல் என்னை கட்சியை விட்டு இடைநிறுத்தியது தொடர்பில் என்னால் சட்ட நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவு வாங்கவும் முடியும் ஆனால் நான் அதனை செய்ய மாட்டேன். மேலும் தேசிய காங்கிரசோடும், அக்கட்சியின் அதாஉல்லா அவர்களோடும் ஒன்றாய் பயணித்த பசுமையான விடயங்களை நினைவுகூர்ந்து கொள்கிறேன். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அவருக்கு பிரார்த்திக்கிறேன்  மேலும் தேசிய காங்கிரஸ் என்ற கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமருவதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் மக்கள் மன்றில் எங்களுக்கான நீதி வழங்கப்படும் போது தேசியகாங்கிரசின் தலைவர் அவரது தவறினை உணர்துகொள்வார் எனவும் தெரிவித்தார்.


கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் செயலாளரும். பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கட்சியின் முக்கியஸ்தராக இருந்த எஸ் எம் சபீஸின் வர்த்தக நடவடிக்கைகளை நசுக்கும் விதமான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் சபீஸ் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளமையும், சபீஸின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட பொதுநிறுவனங்களை இழுத்து மூடுமாறு உத்தரவிட்டமை போன்ற விடயங்கள் இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note