விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு.
புத்தளம் / விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும், க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி அடைந்த மாணவர்கள் 2021 க.பொ.த (உ/த) கலைப்பிரிவு பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (28) காலை 11:30 மணியளவில் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் என்.எம்.எம். சதாத் (அப்பாஸி) அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவார்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஆஷிக், பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏம்.எம். அமீர், மற்றும் ட்ரீம் செண்டர் உரிமையாளர் என்.எம்.நஸ்முதீன், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை உள்ளூராட்சி மன்ற விருதோடை வட்டார வேட்பாளர்கள், அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள்.
M.R. றஸாத் அஹ்மத் - 158
M.R.M.றஸா - 148
S.F. அம்ரா - 144
M.F. நமா - 142
I.F. ஸம்ஹா - 142
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள்
பாத்திமா அப்னா
பாத்திமா இப்ரா
பாத்திமா ரப்னா
No comments