Breaking News

கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் BACK TO SCHOOL பழைய மாணவர் விசேட ஒன்றுகூடல்.

கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் BACK TO SCHOOL பழைய மாணவர் விசேட ஒன்றுகூடல் நேற்று மாலை(04) பாடசாலையின் அதிபர் எஸ்.எஸ்.எம். ஹனிபா தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் நீர் கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபரும்,கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருமான எம்.எஸ்.எம்.ஸஹீர்  பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


இதன் போது வரவேற்புரையை பாடசாலையின் பிரதி அதிபர் பீ.எம்.முஸ்னி நிகழ்த்தினார்.


பிரதம அதிதியாக கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.ஸஹீர் அதிபர்  பாடசாலையின் முன்னேற்றத்திற்கான சிறந்த ஆலோசனைகளையும் சிறந்த கருத்துக்களையும் முன்வைத்து பாடசாலையின் வளர்ச்சிக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக வாக்குறுதி அளித்து  சிறப்புரையாற்றினார்.


இதேவேலை பாடசாலையின் அதிபர் எஸ்.எஸ்.எம்.ஹனீபா தனது உரையில் பாடசாலையின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் ஆகியோர் பூரண ஒத்துப்பை வழங்குமாறு வேண்டிக்கொண்டார்.


மேலும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் BACK TO SCHOOL  சம்மந்தமான நோக்கத்தையும்,பாடசாலைக்கும் பழைய மாணர்களுக்கிடையிலான உறவையும் எம்.எஸ்.எம்.முஸம்மில்  சிறப்பான முறையில் தெளிவுபடுத்தினார்.


மேலும் இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை உரிப்பினர் கே.எம்.எம்.பைசர் மரிக்கார் பங்கேற்றிருந்தார்.


இதன் போது ஏராளமான பழைய மாணவர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)










No comments

note