10 பேர்கள் அடங்கிய அமைச்சர்கள் விரைவில் - எஸ்.பீ. திஸாநாயக்க
-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
புதிய 10 பேர்களைக் கொண்ட அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க புதிய நியமனங்கள் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டதோடு இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லோககே, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க மற்றும் ஆகியோர் அடங்குவர் என்றார்.
No comments