வடிவேல் சுரேஷ் SJB இன் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தான் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி சகல பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
SJB கூட்டணியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாகவே இவ்வாறுதான் விலகத் தீர்மானித்ததாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பசரை தேர்தல் தொகுதியில் மடுல்சீமையில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு அவர் வராததால் இந்த நிலைமை ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
இவ்விடயமாக அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தனக்கு சுகயீனம் காரணமாக இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்ததால் இவ்விடயத்தை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அனைத்து மக்களுக்கும் கூறி மக்களிடம் மன்னிப்பு கோரினேன் அத்துடன் கட்சித் தலைவர் துரித சுகம் பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்தோம்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இன்றுவெலிமடை பிரதேசத்தில் கூட்டம் ஒன்று கலந்துகொண்டுள்ளமை உறுதி ப்படுத்தப்பட்டுள்ளது கூட்டத்தில்அவர் உரையாற்றும் காணொளியும் வெளியாகி உள்ளது. தலைவர் இவ்வாறு பொய் கூறியதால் நாம் மிகவும் தர்ம சங்கடப்படோம். மக்களுக்கும் இதே நிலைதான் எனவே இவ்வாறான ஒரு கட்சியில் என்னால் பதவிகளை வகிக்க முடியாது எனவே இக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகத் தீர்மானித்தேன் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
No comments