Breaking News

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் கடமையேற்றார் !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக  சாய்ந்தமருதை சேர்ந்த டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் இன்று (16) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.  


இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் யூ.எல்.எம். நியாஸ் உள்ளிட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கடந்த காலங்களில் கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் மாநகர சுகாதாரப்பிரிவினூடாக பல்வேறு சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், பாவனைக்கு உதவாத வகையில் ஒதுக்கப்பட்ட இயந்திரங்களை மீள் பழுதுபார்ப்பினூடாக மக்களுக்கு உதவும் வகையில் மாற்றியமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


முன்னாள் அமைச்சர் கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரின் பேரனான இவர் வைத்திய மற்றும் சுகாதார சேவைக்கு அப்பால் பிரதேசத்தின் சமூக நல செயற்பாடுகளில் டார்க் பௌண்டஷன் எனும் அமைப்பை தோற்றுவித்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.







No comments

note