கனமூலை தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!.
கனமூலை தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையத்தில் குறைபாடாக காணப்பட்ட மருத்துவ உபகரணங்கள் ஊர் தனவந்தர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களான ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் இதய நோய் பரிசீலனை செய்யும் இயந்திரம் ஆகியன சுமார் 515,000/= ரூபா பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். முஸம்மில் தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையத்தின் தலைவரும், கனமூலை பெரிய பள்ளியின் தலைவருமான அஷ்ஷேய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
No comments