நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பெற்றுத்தரவும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஹிதாயத் சத்தார்
-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
ஒரு நாட்டின் ஜனநாயகப் பண்புகள் உள்ள தலைவர்களின் விஷேடத்தன்மையானது. அந்த நாட்டின் தேர்தல் ஒன்று காலதாமதமாகின்ற சந்தர்ப்பத்தில் தமது அரசாங்கத்தின் ஊடாக முழுமையான அதிகாரத்தையும், பலத்தையும் பயன்படுத்தி தேர்தல் ஒன்றை நடாத்துவதற்க்கான பூரண அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க வழி செய்வதாகும். என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார். அண்மையில் அக்குரனை பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று அரசியல் கட்சிகள் தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்து ஒரு மாதகாலங்கள் அன்மிக்கின்ற நிலையில் இன்னும் நாட்டு மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற சந்தேக நிலை தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே நாங்கள் ரணில், ராஜபக்ஷ அரசுக்கு சொல்லிக்கொள்வது யாதெனில் இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இங்கு கூறிக் கொள்கிறோம். என்றார்.
No comments