Breaking News

நிலநடுக்க இழப்புகளையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், துருக்கி தூதுவரிடம் அனுதாபம் தெரிவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) 

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பேரிழப்பாகும் என்றும், உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் அங்குள்ள மக்களின் துயரத்தில் பங்கேற்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் டிமெட் செகெர்சியோக்லுவிடம் அனுதாபம் தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள துருக்கித்  தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவேட்டில் அது தொடர்பிலான கருத்துக்களை எழுதிக் கையெழுத்திட்டதோடு , அவர் தூதுவரிடம் இவ்வாறு தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.





No comments

note