Breaking News

பாடநூல் விநியோகம் குறித்து கல்வி அமைச்சரின் எதிர்பார்ப்பு

-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

2023 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியாண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களையும் மார்ச் 27 ஆம் திகதி விநியோகித்து முடிக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்கும் அரசாங்க திட்டத்தின் கீழ் 2023 ஆம் கல்வியாண்டு தொடர்பான பாடப்புத்தகங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்ச்சி 15 அன்று ஆரம்பமானது. ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்கள களஞ்சியசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


இவ்வருடம் 32 மில்லியன் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான செலவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.


இதன் போது கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க மற்றும் கல்வி வெளியீடுகள் ஆணையாளர் இஷட். தாஜூதீன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.







No comments

note