"புள்ளட்" அரசியலால் கொல்லை செய்யப்பட்ட மனிதநேயம்...
-சியாஉர் ரஹ்மான் - பறகஹதெனிய
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக பண்டாரநாயக்க குமாரதுங்காவின் கணவரும், ஸ்ரீ லங்கா மஹஜன கட்சியின் ஸ்தாபகருமான விஜய குமாரதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு 35 வருடங்கள் நிறைவடைகின்றது.
விஜய குமாரதுங்க கொலைக்கு பெப்ரவரி 16, ஆம் திகதி 2023 ஆண்டிற்கு 35 வருடங்கள் நிறைவு பெறுகிறது. தலை சிறந்த அரசியல்வாதியாக மற்றும் கலைஞரான விஜய குமாரதுங்காவின் படுகொலை ஒரு அரசியல் கொலையாகவே இன்று வரை பார்க்கப்படுகின்றது.
எந்த ஒரு இனமும் அநீதி இழைக்கப்படாமல் சிறுபான்மையினர் என்ற பேதங்களின்றி அனைவரும் வாழக்கூடிய வகையில் ஒற்றையாட்சியில் அதிகாரத்தை பரவலாக்குவது என்பது அவரின் பிரதான இலக்காக இருந்தது.
குறிப்பாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அவரின் உண்மையான விருப்பத்தை ஏனைய தமிழ் அமைப்புகளுடன் கூட அங்கிகரித்தது. அவரின் தொலை நோக்கு பார்வையை ஆதரித்து.
இலங்கையின் பிரபலமான அரசியல் கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா மஹஜன கட்சியினை சுற்றி ஒடுக்கப்பட்ட வர்க்க மக்கள் வேகமாக ஒன்று கூடுவதை சகிக்க முடியாத ஒரு குழுவினால் நடாத்தப்பட்ட கொடூரக் கொலை என்று கூறமுடியும். விஜயவின் குணங்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான சேவை செய்ய வேண்டும் என்ற அவரது மனப்பூர்வமான விருப்பமும், அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மக்களும் அவருடன் திரளாக இணைந்திருப்பதை மக்கள் உணர்ந்தனர். மற்ற அரசியல் கட்சிகளாலும், முன்னணிகளாலும் இந்நிலைமை தாங்க முடியவில்லை.
அவரின் தொண்டு பண்பையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உண்மையான சேவை செய்ய வேண்டும் என்ற நேர்மையான விருப்பத்தையும் மக்கள் உணர்ந்து விஜயவின் அரசியல் செயற்பாடுகளை மக்கள் நம்பினர்.
அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் ஸ்ரீலங்கா மஹஜன கட்சி, சமசமாஜக் கட்சி, புதிய சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட ஐக்கிய சோசலிச முன்னணியின் அங்குரார்ப்பணக் கூட்டம் சுகந்ததாச உள்ளக அரங்கில் நடைபெற இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நடைபெற இருந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சோசலிச முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜய குமாரதுங்கவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான அறிவிப்பும் விடுக்கப்பட ஏற்பாடு இருந்தது. இவை அனைத்தும் அவரின் கொலைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கருதலாம்.
2023.02.16 "தினமின" பத்திரிகைக்கு குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா மஹஜன கட்சியின் தலைவருமான அசங்க நவரத்ன அவர்களினால் வழங்கப்பட்டிருந்த நீண்ட கட்டுரையின்... ஓர் சிறு தொகுப்பு
No comments