புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு
சியாஉர் ரஹ்மான் (பறகஹதெனிய)
பறகஹதெனிய மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் 03/02/2023,வெள்ளிக்கிழமை,பி.ப.2:00 மணி முதல் 4:30 மணிவரை பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம். ஏ.எம். நசார் தலைமையில் நடைபெற்ற இநநிகழ்வில் 2022 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிநடாத்திய ஆசியர்கள் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறிப்பாக வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அன்பளிப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். அத்துடன் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டமையும் நிகழ்வின் மற்றுமோர் சிறப்பம்சமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு
பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
அத்துடன் இவ்வைபவத்தை முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்த பறகஹதெனிய நிவ்ஸ் 1 குழுமம் ஊடக அனுசரணையை வழங்கி இருந்தது.
No comments