Breaking News

வரலாறுப் பாடத்திற்க்கான இலவச கருத்தரங்கு

-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

(2022) 2023 ஆம் ஆண்டு க.பொ த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பறகஹதெனிய மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களுக்காக பழைய மாணவர் சங்கத்தினால் இலவசமாக நடாத்தப்படும் கருத்தரங்குத் தொடரின் வரலாறுப்பாடத்திற்க்கான  கருத்தரங்கு அண்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


இக்கருத்தரங்கின் வளவாளராக வவுனியா அரபா வித்தியாலயத்தின் ஆசிரியர் எஸ்.ஐ.எம். சமீம் கலந்து கொண்டு விரிவுரை நடாத்தியமை  குறிப்பிடத்தக்கது. 


மேலும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து 2000, 2009 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர  வகுப்பு பழைய மாணவர்களின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில்  ஆரம்பமாக பாடசாலையின் உதவி அதிபர் ரிபாஸ், ஆசிரியர்களான  எம்.எப்.எம் பயாஸ், எம்.எம். அர்ஷாத் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் எஸ்.எம். சஹீத், செயலாளர் பாஹிம் அமானுல்லா உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் உணவு அனுசரணையாளர்களாக பறகஹதெனிய "மிசினோ பேகர்ஸ்" தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments

note