இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பாவனையை தடுக்க பூப்பந்தாட்ட பயிற்சி முகாம்.
நூருள் ஹுதா உமர்
இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் துறையூர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடதொகுதி பூப்பந்தாட்ட அரங்கில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றது.
துறையூர் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.டி.எம்.றிஸா தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் ECDO அமைப்பின் தலைவர் அஸ்மி யாஸின் , மாவட்ட பூப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பீ.வசந்த், சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்சன், பயிற்றுவிப்பாளர் ஏ.றியாஸ், துறையூர் விளையாட்டு கழக பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments