ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை இழக்கும் உறுப்பினர்கள்
- சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து கொண்ட 1137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் கூடிய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 341 மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில் எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 1137 புதிய உறுப்பினர்களை கட்சி நியமிக்கவுள்ளது. என தெரிவிக்கப்படுகிறது.
No comments