Breaking News

மின்ஹாஜ் வரலாற்றில் தன்னையும் அடயாளப்படுத்திய முஹம்மட்

அண்மையில் வெளியான பெறுபேறுகள்  முழு நாட்டிலிலுமுள்ள தரம் ஐந்து மாணவர்களின்  திறமைக்கும், முயற்சிக்கும் ஏற்ற வெற்றியையும்,விவேகத்தையும் பறைசாற்றி இருக்கிறது.


வடமேல் மாகாண.புத்தளமாவட்டத்தில்.பெருக்குவட்டான் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பஸீல்,அஸ்ரிபா தம்பதிகளுக்கு மூத்தமகனாக பிறந்தவர் *முஹம்மட்*.


அண்மைக்காலமாக தொடர்சாதனைகளைப் படைத்துவரும் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார்.2022ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்  179 புள்ளிகளைப் பெற்று வடமேல் மாகாணத்தில் முதல் நிலை மாணவனாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் புத்தள மாவட்டத்திற்கும்,தனது கிராமத்திற்கும் புகழை ஈட்டித் தந்துள்ளார்.


1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு முதன் முறையாக மாகாணமட்டத்தில் முதலிடம் கிடைத்ததை இட்டு அதிபர்,ஆசிரியர்.பாடசாலைச் சமூகம்,கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


இம்மாணவன் வாசிப்பிலும்,விளையாட்டிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.தன்னுடைய  இவ் வெற்றிக்கு பாடசாலையும்.தாரிகா ஆசிரியையின் வழிகாட்டலும்,தனது பெற்றோர்களின் ஊக்கிவிப்புமே காரணம்.தனது எதிர்கால இலட்சியம் காலத்தின் தேவை அறிந்து பொருத்தமான சேவை வழங்குவதே என்றார்.


இவரின் ஆளுமைகள் விருத்தியடைந்து சிறந்த சமூகப் பிரசையாக. திகழ வேண்டுமென வாழ்த்துகிறோம்.




No comments

note