Breaking News

மொஹமட் அஹ்னப் உயிரில் மருத்துவ அறிவியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியில் முதல்தர சித்தி

-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

குருநாகல், பறகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் அஹ்னப் கண்டி ICBT Campus கல்வி நிறுவனத்தில் உயிரியல் மருத்துவ அறிவியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியினை நிறைவு செய்துள்ளார். 


பறகஹதெனிய மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் 2014 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 5A சித்திகளையும், 2B, 2C சித்திகளையும் பெற்று உயர் தரத்தில் Bio Science பிரிவில் உயர் தரப்  பரீட்சையில் 2019 ஆம் ஆண்டு தோற்றி 1C, 2S சித்திகளைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்தும் அத்துறையில் கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி உயிரில் மருத்துவ அறிவியல் உயர் டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மொஹமட் அஹ்னப் பறகஹதெனிய மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் ஏ.டப்ளியூ. எம். பிரவ்ஸ் மற்றும் ஆசிரியை எச்.எஸ். நவ்பா ஆகியோரின் புதல்வரும் ஆவார்.





No comments

note