Breaking News

புத்தளம் தள வைத்தியாசாலையின் வெளி நோயாளர் பிரிவிக்கு அத்தியவாசிய மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு

புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக்குழு செயலாளரும் , முன்னாள் நகர சபையின் நிர்வாக அதிகாரியுமான சமூக ஆர்வலர்  எச்.எம்.எம். சபீக் அவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புத்தளம்   மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசாரின் ஏற்பாட்டில் புத்தளம் தள வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கான (140,000/=) ஒரு இலட்சத்து நாப்பது ஆயிரம் ரூபா  பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்கள்  Paracetamol syrup, Itraconazole and Amoxycilin  Chief Pharmacist  திருமதி  மாஜிதா  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 


குறித்த  மருந்து பொருட்கள்  YWMA - SRI LANKA அமைப்பின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments

note