சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சுதந்திர தினம் அனுஷ்டிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு இன்று (04) சனிக்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீமின் நெறிப்படுத்தலில் அதன் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல். சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதன் போது பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.சீ.எம்.பாஹிர் மௌலவியினால் நாட்டின் சுபீட்சத்துக்காகவும் நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காகவும் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டு, பள்ளிவாசலில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. இம்மரநடுகை நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல். சம்சுதீன் மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் மரங்களை நட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் பொருளாளர் ஏ.ஏ. சலீம் உட்பட மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸீம், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான், நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் முன்னாள் செயலாளர் எம்.ஐ.அப்துல் மஜீது, நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்மார்கள், அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
No comments