Breaking News

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு

- சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

2022 (2023) க.பொ த. (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள பறகஹதெனிய தேசிய பாடசாலையின் மாணவர்களுக்காக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் இலவசமாக நடாத்தப்படும் கருத்தரங்க தொடரின் கணிதப்பாடத்திற்கான கருத்தரங்கு 18.02.2023 ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கின் வளவாளராக மாவனெல்லை ஷாஹிரா கல்லூரியின் ஆசிரியர் எம்.ஐ. அப்துல் ரஹீம் கலந்து கொண்டு விரிவுரை வழங்கினார்.


மேலும் பாடசாலையின் 1993 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர  வகுப்பு பழைய மாணவர்களின் பூரண அனுசரணையுடன் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. 


நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலையின் உதவி அதிபர் ரிஃபாஸ், ஆசிரியர். M.F.M.ஃபயாஸ் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன்  1993 க.பொ.த சாதாரண தர வகுப்பைச் சேர்ந்த சே M.R.M.இர்ஃபாத், M.F.M.நஸ்ஹான், இஸ்ரத் ஸவாஹிர்,M.R.M.ருஷான், M.S.M.அக்ரம் ஆகியோர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக  அனுசரணைக்கான கையேட்டை பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் S.A.M.ஸஹீத் அவர்களிடம் கையளித்தனர்.








No comments

note