Breaking News

கொழும்பு அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித மிஃராஜ் தின இரவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

புனித மிஃராஜ் தின நிகழ்வு (18) நேற்று சனிக்கிழமை இரவு கொழும்பு - 12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலில் இரவு 8 மணி முதல் இடம்பெற்றது.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு - 12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.


இந்நிகழ்வில், அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.நூருல்லா மிஹ்ராஜ் இரவின் முக்கியத்துவத்தைப்பற்றி உரை நிகழ்த்தினார். 


இஹ்ஸானிய்யா அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.எப்.எம். பரூத் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகளை (துஆ) நடாத்தினார்.  


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு முஸ்லிம் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், அலா அஹமட் உட்பட திணைக்கள அதிகாரிகள், லிபிய தூதரக உயர் அதிகாரி முஸ்தபா இப்றாஹீம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், ஹஜ் குழுவின் தலைவரும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான இப்ராஹிம் அன்சார், கதீப்மார் சம்மேளனத் தலைவர் மௌலவி அப்துல் ஜப்பார், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சர்வமதக் கூட்டணியின் இணைத் தலைவர் அல் ஹாபில் அஷ் ஸெயிட் கலாநிதி. ஹசன் மௌலானா, சூபி தரீக்காக்களின் தலைவர் நகீப் மௌலானா, கெஸல்வத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முப்தி, அந் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எச். அம்ஜதீன், இணைச் செயலாளர்கள் ஏ.எம். கரீம் மற்றும் இர்ஷாத் ஹுசைன், பொருளாளர் எம்.என்.எம். நஜிப்தீன் கொழும்பு தெற்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உலமாக்கள், அரச உயர் அதிகாரிகள், கொழும்பு பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், பள்ளிவாசல் குழு உறுப்பினர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.


அந் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எச். அம்ஜதீன் நிகழ்வில் நன்றியுரை நிகழ்த்தியதோடு, தேசிய ஒருமைப்பாட்டிற்கான சர்வமதக் கூட்டணியின் இணைத் தலைவர் அல் ஹாபில் அஷ் ஸெயிட் கலாநிதி. ஹசன் மௌலானா ஸலவாத் ஓதினார்.


நிகழ்வில் விசேட அம்சமாக கொழும்பு -12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலின் நூற்றாண்டை முன்னிட்டு, பள்ளிவாசலுக்கு டயஸ் செயார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹனீபா ஹாஜியார் சோலார் பவர் சிஸ்டமொன்றைக் கையளிப்தற்கான ஆவணங்கள் இதன்போது கையளிக்கப்பட்டது.   


கொழும்பு -12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அங்கு இடம்பெற்ற புனித மிஃராஜ் தின இரவு நிகழ்வுகள் யாவும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.










No comments

note