ஐக்கிய மக்கள் சக்தி திங்களன்று கொழும்பை முற்றுகையிடவுள்ளது குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார
சியாஉர் ரஹ்மான் - பறகஹதெனிய
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து எதிர்வரும் திங்களன்று ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பை முற்றுகையிடுவதாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார கினிகத்ஹேனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது அரச அச்சகத்திற்கு நிதி வழங்காது ஏதோ ஒரு அமைப்பில் தேர்தலை நிறுத்துவதற்க்கான நடவடிக்கையில் இந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது. இது பெரும் ஜனநாயக விரோத செயற்பாடாகும். இதனால் தேர்தலை நடாத்தும் வரை ஐக்கிய மக்கள் சக்தி போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியில் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்து வருகின்றன நிலையில் மேலும் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். என்றார்.
No comments