முன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்க காலமானார்
-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
குருநாகல் மாவட்டம், கல்கமுவ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்க தனது 76 வயதில் காலமானார்.
இவர் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாரனாத் பஸ்நாயக்காவின் தந்தையாவார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான இவர் 1980 களில் அரசியலில் பிரவேசித்த குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக சுற்றாடல் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments