தேனீ கட்டுப்பாடில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான செயற்திட்ட நிகழ்வு
சியாஉர் ரஹ்மான் - பறகஹதெனிய
குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பிரதேச செயலாளர் காரியாலயத்தின் செயலாளர் மற்றும் ஏனைய பணியாளர்கள் உத்தியோகத்தர்களின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி தேனீக் கட்டுப்பாட்டில் ஈடுபடும் மற்றும் ஈடுபட விரும்புவோருக்கான தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றி முன்னெடுப்பதற்க்காக குடும்பங்களுக்கான தரமான தேனீக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்க்கான பெட்டிகள் மற்றும் வெற்றிகரமாக பயிற்சிகளை நிறைவு செய்த தொழில் முனைவோருக்கு புகைப் பிரயோக உபகரணங்கள் (ஸ்மோக்ஹவுஸ்கள்) வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் மாவத்தகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த செயற்திட்டம் தொழில் அமைச்சின் வழிநடாத்தலிலும், நிதி ஒதுக்கீடுகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் ஒழுங்கு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவத்தகம பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி பிரிவின் நிறுவன அபிவிருத்தி நிதி அதிகாரி மற்றும் பிரதேச மட்டத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிநுட்ப பிரிவினரும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
No comments