பல்கலைக்கழகத்தின் கல்வி வாய்ப்புக்கள் பற்றிய செயலமர்வு
-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் விமல் செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், தகவல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் கல்வி வாய்ப்புகள் பற்றிய செயலமர்வு நிகழ்வு அண்மையில் குருநாகல், மல்லவப்பிட்டிய பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments